தமிழகத்திற்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் மருந்துகள் வந்தன

37 0

மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நேற்று பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள்தான் வந்துள்ளன. நேற்று காலை நிலவரப்படி, 12 ஆயிரத்து 520 மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று போடப்பட்டுவிட்டன.
ஏற்கனவே மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது.
கொரோனா தடுப்பூசி

 

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தமிழக அரசால் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சூழ்நிலையிலும் தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கு இன்று மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.

மாநில அரசின் நேரடி கொள்முதலின்கீழ் மருந்துகள் பெறப்பட்டுள்ளன.