உதவிகளுக்காக ரஷ்யாவுக்கு தினேஸ் நன்றி தெரிவிப்பு

291 0

கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ரஷ்யா நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ரஷ்யாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான தொலைபேசி உரையாடலின் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.