நீதித்துறை சார் முக்கிய நியமனங்களுக்கு நாடாளுமன்ற பேரவை இணக்கம்!

54 0

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை நியமிக்குமாறு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற் நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதிபதி கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.