மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசியேற்றும் பணி ஆரம்பம்

225 0

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான கொவிட் தடுப்பூசியேற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பிரதேச செயலக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு இன்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி முதற்கட்டமாக ஏற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெறும்இ தடுப்பூசியேற்றும் செயற்பாட்டில்இ மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவு மக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்டச் செயலாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.