சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன்

232 0

இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு கூறினார்.

ஆகவே இவ்வாறு நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவர, மக்களால் தெரிவு செய்ய்யப்படும் வடகிழக்கு இணைந்த  சுயாட்சி சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி நாடு முழுவதும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக சீனாவிற்கு அதிகாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் இது நாட்டுக்கு பெரும் பிரச்சினையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 70 வருடங்களாக சாத்வீக ரீதியாவும் ஆயுத ரீதியாகவும் போராட்டம் மேற்கொண்டு வந்த இலங்கை பிரஜைகளாகிய தமிழர்களுக்கே அரசாங்கம் அதிகர்ப் பகிர்வினை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.