வே.பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு நான் கவலை அடைந்தேன் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ண

537 0

K800_DSC_0396தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிளந்த செய்தி என்னை கவலையடைய வைத்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மனம் உருகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு கொண்டிருந்தார்.
இதன் ஒரு அங்கமாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நச்சுத்தன்மையற்ற மருந்துக்கள் பற்றி அரச பொறிமுறையினை அறிவூட்டும் மாவட்ட வேலைத்திட்டத்திற்கான கலந்துரைடலில் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இவ்விடயம் தொடர்பாக அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:- கடந்த காலங்களில் வடக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். குறிப்பாக இந்திய அமைதிப்படை இங்கு நிலை கொண்டிருந்த போதம் நான் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றிருந்தேன். அதிலும் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வந்து ஈரொஸ் தலைவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தேன். அந்த கால கட்டத்தில் எனது தேர்தல் பரப்புரைகளை ஈரோஸ் அணியினர் மேற்கொண்டிருந்திருந்தனர்.
இதன் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்பும் எனக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனும் நான் தொடர்புகளை பேணியிருந்தேன்.
அதற்கு பின்னரான காலகட்டங்களில் யாழ்ப்பாணத்திற்கு நான் வரும் போது மறைந்த முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் வீட்டில் தங்கியிருந்து, தற்போதைய அமைச்சராக உள்ள அவருடைய மனைவி விஜயகலா மகேஸ்வரனால் பரிமாறப்படும் உணவினையும் உண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றிருக்கின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணித்த செய்தி கேட்டு நான் மிகவும் கவலையும் அடைந்திருந்தேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.