நீரிழிவினால் பாதிக்கப்பட்ட கொரோனாநோயாளி உயிரிழந்தால் அவர் நீரிழிவினால் உயிரிழந்தார் என தெரிவிக்கின்றனர் தரவுகளை அவ்வாறே மறைக்கின்றனர்.—————-
புதிய வைரஸ் வேகமாக பரவுகின்றது ஆனால் பிசிஆர் முடிவுகள் வெளியாவது தாமதமாகின்றது
———–
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்குவதே ஒரே வழி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும் கிராமசேவையாளர் பிரிவுகளை முடக்குவதன மூலம் அல்லது தடுப்பூசியில் தங்கியிருப்பதன் மூலம் மாத்திரம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் நாடு எதிர்கொள்ளும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இன்று ஒருவர் கொரோனாவினால் உயிரிழக்கின்றார் என்றால் அவர் ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு நோய் அறிகுறியில்லை இல்லை என்றால் அவர் தான் நோயாளியா என்பதை அறிந்துகொள்வதற்கு இரண்டு வாரங்களாகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த சில வாரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய வைரஸ் வேகமாக பரவுகின்றது ஆனால் பிசிஆர் முடிவுகள் வெளியாவது தாமதமாகின்றது எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
21000 பிசிஆர் சோதனைகளின் முடிவுகள் வெளியாகவில்லை அரசாங்கம் வெளியிடும் தரவுகள் குறித்து மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனவும் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
பதுளையில் சமீபத்தில் கொரோனாவைரசினால் 19 பேர் உயிரிழந்தனர் ஆனால் மூவரின் மரணம் குறித்தே அறிவிப்பே வெளியானது என தெரிவித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட கொரோனாநோயாளி உயிரிழந்தால் அவர் நீரிழிவினால் உயிரிழந்தார் என தெரிவிக்கின்றனர் தரவுகளை அவ்வாறே மறைக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

