ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

471 0

1ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தினரது கருத்துப்படி அவர் தற்கொலை செய்யுமளவில் எந்த காரணமும் இல்லை என்றும் ஒருவாரத்திற்கு முன்னரும் அவர் தனது குடும்பத்தினரோடு இயல்பாகவே கதைத்ததாகவும் கதைக்கும்போது தான் நாட்டு நிலமை ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பதால் தான் நாட்டுக்கு திரும்ப வந்து வாழப்போவதாக கூறியிருந்ததாகவும் தெரிவிக்கும் அவர்கள் தனது மகன் வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டு அவரது கழுத்தில் கயிற்றை கட்டி தற்கொலை என உண்மையை பொலீசார் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த இளைஞர் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரதும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவினதும் கட்டுப்பாட்டில் இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற முறையில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன்காரணமாகவே மன்னார் ஊடாக இந்தியாவை சென்றடைந்தார்.

கொலை செய்யப்பட்டபோதும் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கோ அல்லது நடைபெற்றது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்தாத பொலீசார் அவரது உடலை உடனடியாக புதைத்திருப்பதும் அவர்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வராதவாறு பொலீசார் மூடிமறைக்க முயற்சித்துள்ளனர் என்பதோடு இந்த கொலைக்கான காரணத்தையும் மூடிமறைத்துள்ளமையை தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.