பஞ்சாப்பில் 6 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு

380 0

அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.

பஞ்சாப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.. இந்த துயரம் பற்றி அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக தலைவர் சுனில் தேவ்கன் கூறியதாவது:-

உதவி வழங்குமாறு மாநில நிர்வாகத்தை பல முறை கேட்டுக்கொண்டோம். ஆனால் தேவையான உதவியைச் செய்ய யாரும் முன்வரவில்லை. 2 பெண்கள் உள்பட 6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். அவர்கள் மரணம் அடைந்த பின்னர்கூட வெறும் 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள்தான் எங்கள் ஆஸ்பத்திரிக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் வினியோகத்துக்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று முக்கிய ஆக்சிஜன் வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை தடுப்பதற்காக ஆக்சிஜன் பிரிவுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.