தியாக தீபம் அன்னை பூபதியின் 33 வது ஆண்டு வணக்க நிகழ்வு Düsseldorf நகரில் 24.04.2021 இன்று நினைவு கூரப்பட்டது.

383 0

நிகழ்வில் பொதுச்சுடரினை Viersen நகர கோட்ட பொறுப்பாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தாயக நலன் பொறுப்பாளர் திரு. ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் சகோதரியான திருமதி. தயாளினி ஜெயசங்கர் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நாட்டுப்பற்றாளர் களுக்கு மலர் சுடர் வணக்கங்களை செலுத்தினர்.

சிறப்புரைகளை தாயக நலன் பொறுப்பாளர் திரு.ராஜன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மாநில பொறுப்பாளர் திரு. நடராஜா திருச்செல்வம் அவர்களும் ஆற்றினர். இந்நிகழ்வினை கலையரசி அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். நிகழ்விலே தொடர்ந்து கவிதை மற்றும் மாவீரர் நினைவு சுமந்த பாடலுடன் தமிழீழ தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.