அன்னை பூபதியின் 33 ஆவது நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி, றயின.

824 0

யேர்மனி றயின என்னும் இடத்தில் அன்னைபூபதி அம்மாவின் 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் நினைவுகூரப்பட்டது.
கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரித்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இவ் வேளையில் தமிழீழமக்கள் தமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை யேர்மனியின் நகரமத்தியிலும் பூங்காக்களிலும் கொரோனா சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் இன்று 24.4.2021 சனிக்கிழமை றயின என்னும் சிறு நகரத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் ஓர் பூங்காவினில் ஒன்றுகூடி அன்னை பூபதி அம்மாவுக்கும் யேர்மனியில் தேசவிடுதலைக்காக உழைத்து சாவடைந்த மாமனிதர் இரா நாகலிங்கம் ஐயாவுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் தீபம்ஏற்றி வணங்கினர்.
இந்த நகரத்தில் நீண்டகாலம் வாழ்ந்து அனைத்துலகத்திலும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பிள்ளைகளின் தமிழ்க்கல்விக்காக பாடநூல்களை உருவாக்கி நீண்டகாலம் பணிசெய்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்களும் மக்களால் நினைவுகூரப்பட்டார்.