இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் ராமேஸ்வரத்தில் மீட்பு

246 0

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 31 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த கடலட்டை தொகையினை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை ராமேஸ்வரம் துறைமுக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்