கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்

231 0

கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது.

www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்தது.

;இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப் பெற்று, ; பொலிஸ் ; இணையத் தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ; திருட்டு போன தொலைபேசிகளின் EMI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ; ஒருவர் உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் கூறுகின்றனர்.

திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள ; நிலையிலேயே, பொலிசார் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொது மக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.