கைதிகளை பார்வையிட புதிய கட்டுப்பாடு

337 0

புத்தாண்டு பருவத்தில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக பார்வையாளர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு ஒரு கைதி இரண்டு விருந்தினர்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் வாய்ப்பு இந்த முறை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வழங்கப்படும் என்றும், மேலும் பல பார்வையாளர்கள் வந்து கைதிகளை சந்திக்க முடியாது என்றும் அவர் கூறினார்.