புத்தாண்டின் பின்னர் திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

387 0

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார். இந்த ஆலோசனைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதை தாமதப்படுத்த முடியாது என்பதால் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.