கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தா ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் போட்டியிட்டார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நுரையீரல் பாதிப்பும் இருந்தது.
தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

