பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கறிஞர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகளினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு எவ்வித சட்டபூர்வமான அடிப்படையும் அற்றது என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர இதன்போது தெரிவித்துள்ளார்.

