மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் திருவுடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மன்னார் ஆயர் இல் லத்திலிருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்று பிற்பகல் 2 மணி வரையில் அவரது திருவுடல் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

