புதையல் தோண்ட முயற்சித்த 11 பேர் கைது!

389 0

வவுனியா – தாலிக்குளம் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு அருகில் புதையல் தோண்ட முயற்சித்த இரண்டு தேரர்கள் மற்றும் ஆலய மதகுரு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மகிழுந்துகள், முச்சக்கரவண்டி மற்றும் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தேரர்கள் இருவரும் அக்குரஸ்ஸ மற்றம் அநுராதபுரம் பகுதிகளிலுள்ள விகாரைகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மதகுரு உள்ளிட்ட ஏனையோர் வவுனியா, அநுராதபுரம், மதவாச்சி, பதுளை மற்றும் மாத்தறை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்