கிணறு அகழ்வதாக கூறிக் கொண்டு 50 அடிக்கு ஆழமாக தோன்றிய கிணற்றின் வலது பக்கத்துக்கு 40 அடி நீளத்துக்கு கால் வாய் வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் நகரில் பமுணாவெல பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு அருகாமையிலேயே நள்ளிரவு 12 மணியளவில். இவ்வாறு கிணறு தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வருகை தந்த மோட்டார் வாகனத்தை, பிரதேசவாவிகள் பமுணாவெ விஹாரைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதன்பின்னர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

