யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

46 0

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகள் முல்லேரியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரது மாதிரிகளின் முடிவு எடுக்க முடியாதுள்ளதால் மீண்டும் அவர்களிடம் மாதிரிகள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.