யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

314 0

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைகளத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.