அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி வரலாற்றில் முதன்முறையாக இலங்கை ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்கொள்வனவு விலை 197.62 ரூபாய் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அந்நிய செலாவணி புள்ளிவிபரங்களின் வரலாற்றில் முதல் தடவையாக ரூபாயின் விலை 202 க்கு மேல் அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2020 ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயத்தின் விலை 200 ரூபாயாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

