கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மேலும் 161 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 781 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 566 பேர் உயிரிழந்துள்ளனர்.

