கதிர்காமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

260 0

´செழிப்பான பார்வை´ கொள்கை அறிக்கையின் கீழ் புனிதத் தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கதிர்காமம் புனிதத்தலம் மற்றும் யாத்திரை செய்பவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் 120 மில்லியன் ரூபா செலவில் நடைபாதை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. அத்துடன் துட்டகைமுனு மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் துடுவெவயை புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இறுதியாக 1947 ஆம் ஆண்டு துடுவெவ புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் இக் குளத்தை புனர்நிர்மாணம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கதிர்காமத்தை சுற்றியுள்ள இடங்களை பசுமையான இடங்களாக அபிவிருத்தி செய்வதுடன் யாத்திரை செய்பவர்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் ஆன்மீக வசதிகளை வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதற்காக ரூபாய் 200 மில்லியன் பணம் செலவாகும் என்பதுடன் 2,030 ஆம் ஆண்டளவில் இத்திட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படும்.