இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

290 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இலங்கையில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதற்கமையவே கொரோனா மரணங்கள் 557 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த, பசறை பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆணொருவர் நிமோனியா, இதய நோய் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஆணாருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இரத்தம் விஷமானமை, நீரிழிவு, சிறுநீரக நோய் உள்ளிட்டவை காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கண்டி பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஆணொருவர், கடந்த 24 ஆம் திகதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 91,289 பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் நேற்று (வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.