அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி)

510 0

ankara_bombing_victimsதுருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் நியாயமாக அங்காராவை பாதித்துள்ளமை யதார்த்தமானது.பிராந்திய அரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான அதன் இயலுமையை பாரியளவில் அவை வீழச்சியடையச் செய்துள்ளன. குறிப்பாக, வலுச்சமநிலை மிக்க நாடுகளுடனான முறுகல் நிலை –எகிப்து, ரஷ்யா, ஈராக் – துருக்கியை நினைத்ததை விட படுகுழிக்குல் ஆழ்த்தி விட்டதென்றே கூறலாம்.

பிராந்திய அரசியல் தொடர்பாக யாருடன் இணைந்து எத்தகைய நகர்வை மேற்கொள்ள முடியும்? என்ற கேள்விக்கு திருப்திகரமான மூன்றாம் பாதையொன்றை கண்டறிய முடியாத நிலையில் பிராந்திய சதுரங்க ஆட்டத்திலிருந்து அங்காரா ஓரங்கட்டப்பட்டது.இந்தப் பின்புலத்திலேயே துருக்கியின் ‘புதிய வெளிநாட்டுக் கொள்கை’ நகர்வுகள் நோக்கப்பட வேண்டும். குறிப்பாக, டெல்அவீவ்,மொஸகோ மற்றும் அபூதாபியுடனான உறவை சுமுக நிலைக்கு கொண்டு வரும் அங்காராவின் முயற்சிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

எனவேதான், துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தீடிர் மாற்றங்கள் ஓரு விதத்தில் மேற்குலக நாடுகளை சற்று சித்திக்க வைத்துள்ளது. அதிலும், அங்காராவுக்கும், மொஸ்கோவிற்கும் இடையிலான உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் ‘எதிர்ப்பார்க்கப்படாத நகர்வு’ என அமெரிக்காவின் அரசியல் விற்பன்னர்கள் வட்டம் கருத்து வெளியிட்டுகின்றனர்.

அங்காராவைப் பொருத்தவரை ‘வெற்றி-தோல்வி’ என்று புதிய மாற்றங்களை மதிப்பீடு செய்வதனை விட’யதார்த்த அரசியலை’ (Real-Politic) நோக்கி திரும்பி வருவதற்கு அது எத்தனிக்கிறது எனலாம். இந்த வகையில் மொஸ்கோவுடனான அங்காராவின் சுமுக நிலையை நோக்கிய நகர்வுகள் பல்வேறு காரணிகளை பின்புலமாகக் கொண்டதாகும்.

அதில் சிரியா மற்றும் அகன்ற மத்திய கிழக்கில் துருக்கியின் வகிபாகத்தை நசுக்குதல் மற்றும் அதன் வீச்சை உள்நாட்டிகுள்ளால் மட்டுமே (Internalizing the influence) சுருக்கிக் கொள்ளச் செய்தல் என்ற அடிப்படையில் திட்டமிட்டியங்கும் சக்திகள் ‘மொஸ்கோ-அங்காரா’ விரிசலை விசலடித்து வரவேற்றன. மட்டுமன்றி, அவ்விரிசலை ‘வரலாற்றுக் காரணிகளுடன் தொடர்புபடுத்தி’ மேலும் ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.

துருக்கியின் முன்நகர்வுகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டணியணியையும், ஈரான் தலைமையிலான பிராந்திய கூட்டணியையும், குர்திஷ்தான் தொழிளாளர் கட்சி தலைமையிலான உள்நாட்டு அரசு சாரா இயக்கங்களையும் சமாளிப்பதற்கான மூன்றாம் பாதையாக அது வரை ‘மொஸ்கோவுடனான உறவு’ அங்காராவைப் பொருத்தவரை கருதப்பட்டு வந்துள்ளது.

ஆனால், மொஸ்கோவுடனான விரிசலானது வேகமாக மாறும் கள மாற்றங்களை சமாளிப்பதற்கான குறைந்த பட்ச வலுச்சமநிலையையும் அங்காராவுக்கு முன்னால் இல்லாமல் செய்து விட்டன என்பதே ஆய்வளர்களின் அதவானமாகும். இன்னும் மொஸ்கோவுடனான அங்காராவின் உறவு தொடர்ந்தும் விரிசவல் அடைந்து கொண்டு செல்ல வேண்டுமென்பதே வொசிங்டன், தெஹ்ரான் மற்றும் டமஸ்கஸின் விரும்பமும் கூட. இந்தப் பின்னணியிலேயே மொஸ்கோவுடனான உறவை மீட்டிப் பெற வேண்டிய நிர்ப்பந்த நிலை துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பட்டது. மட்டுமன்றி, இதற்கூடாக புவியரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான புதிய உத்வேகத்தை அங்காராக பெற்றுக் கொள்கிறது என்றும் கூறலாம்.

மொஸ்கோவுடன் அங்காராவின் புதிய நகர்வுகள் சில மிக முக்கியமான மாற்றங்களை ‘அகன்ற மத்திய கிழக்கரசியல்’ சூழமைவுகளில் ஏற்படுத்த வாய்புண்டு. முதலாவது, ஒரளவுக்கு பிராந்திய தனிமைப்படுத்திலிருந்து புதிய நகர்வுகள் அங்காராவை விடுவிப்பதனால், தெஹ்ரானின் பிராந்திய ஆதிக்கயரசியலை கட்டுப்படுத்துவற்கான கருவியாக மொஸ்கோ அங்காரா உறவு கருவியாக்கப்படலாம்.

காரணம், சிரியாவின் களநிலைமைகளை கையாளுவதில் தெஹ்ரானின் வகிபாகம் எவ்வளவுக்கு குறைக்கப்பட முடியுமோ அதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு மொஸ்கோ விரும்புகிறது. அதேபோன்று, மொஸ்கோ-அங்காரா உறவு’பிராந்தியத்தில் ஏற்படுத்தப் போகும்’ வலுச்சமநிலை மாற்றங்கள் தெஹ்ரான்-அமெரிக்கக் கூட்டை சமநிலைப்படுத்தும் என்பதனால் அதனை வொசிங்கடனும் ஏற்க மறுக்கிறது. மறுபுறம், மொஸ்கோ அதனை விரும்புகிறது.

இவ்வாறு தொடரும் பரந்த வலுச்சமநிலை சதுரங்க ஆட்டத்தின் நிழலிலேயே டெல்அவீவ்-அங்காரா உறவையும் அலச வேண்டும். குறிப்பாக, அணுச்செறிவாக்கல் ஓப்பந்தத்தின் பின்னரான அமெரிக்காவின் பிராந்திய நகர்வுகள் அங்காராவின் வகிபாகத்தை ஒரங்கட்டச் செய்தது போலவே, தீர்மானம் எடுத்தல் மேசையில் இஸ்ரேலின் வீச்சையும் கட்டுப்படுத்தியது.

சிரியா, யெமன்,ஈராக் மற்றும் ஈரானிய விவகாரங்களை கையாளும் போது இஸ்ரேலின் தேசிய நலனிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் அமெரிக்க நடந்து கொண்ட போதிலும் , டெல்அவீவின் நேரடி பங்கேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். இங்கு டேல்அவீவ்-அங்காரா இரு தரப்பினரும் அமெரிக்காவின் சமீபத்திய நகர்வுகளால் ‘தனிமைப்பட்டுள்ளனர்’ என்பதே உண்மை. இரண்டு தரப்பினரும் தனிமைப்படுத்தலிருந்து வெளியேறுவதற்கான உத்தியாக புதிய உறவுப் பாலத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.

அதேபோல் எண்ணை மற்றும் கேஸ் சந்தைக்கு தெஹ்ரானின் மீள்நுழைவு டெல்அவீவை சற்று சிந்திக்க வைத்துள்ளது. ஏனெனில், இஸ்ரேலின் கேஸ் ஏற்றுமதிகள் சர்வதேச சந்தையில் இடம்பிடிப்பதற்கான வாயப்பை தெஹ்ரானின் நுழைவு கட்டுப்படுத்தக் கூடும். விளைவாக, துருக்கியுடனான ஒப்பந்தமும், அதனைப் தளமாகப் பயன்படுத்தி ஜரோப்பி யூனியன் நாடுகளுக்கு கேஸை ஏற்றுமதி செய்யும் சந்தர்ப்பமும் டெல்அவீவிற்கு அங்காரா உறவினுடாக வாய்க்கிறது. இதனால், சர்வதேச கேஸ் சந்தையில் தெஹ்ரானை விட முன்னிற்பதற்கு டேல்அவீவால் முடியும்.

மறுபுறம், இஸ்ரேலுடனான உறவால் அங்காரா பல்வேறு இராஜதந்திரரீதியான சாதகமான விளைவுகளை அனுபவிக்க முடியும். அதிலொன்று, அமெரிக்க – தெஹ்ரான் அதிகாரவலையமைப்பை கட்டுப்படுத்துவதற்கான அரசியல் தடைகளை ஏற்படுத்தல், பலஸ்தீனின் காஸா பகுதிக்கான உட்கட்டுமான , மின், நீர் வழங்கல் முறைமையொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளல் மற்றும், இஸ்ரேலிய லொபி குழுக்களின் (Lobby Groupes) அழுத்தத்திலிருந்து அங்காராவை சர்வதேச தளத்தில் விடுவித்தல் போன்றனவாகும்.

அங்காரா-டெல்அவீவ் புதிய உறவுப் பாலத்தை மத்தியஸ்த்தம் வகித்ததினூடாக வொஷிங்டன் இதனை வரவேற்கிறது என்பது தெளிவு. ஏனெனில், இஸ்ரேல்-அங்காரா உறவு மத்திய கிழக்கின் பல்வேறு தலைவலிகளை தீர்த்து வைப்பதற்கு அமெரிக்காவுக்கு துணை செய்துள்ளன. உறவில் விரிசல் என்பது அமெரிக்காவைப் பொருத்தவரை மத்திய கிழக்கின் விவகாரங்களை முகாமை செய்வதில் நியாயமான கஷ்டங்களை ஏற்படுத்தும் காரணியாகும்.

சுவாரஷ்யமான விடயம் யாதெனில், டெல்அவீவ்-அங்காரா உறவுவில் ஏற்படும் சுமுகநிலையை மொஸ்கோ வரவேற்பதற்கு தயங்குகிறது. அதற்கான நியாயம் யாதெனில்,மொஸ்கோவின் சிரியா மீதான நகர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் சுற்றுவலைப்பு வியூகமாக‘Encircling Strategy ‘டெல்அவீவ்-அங்காரா உறவு அமையுமா? என்ற ஆழமான கேள்வியாகும். இவ்வாறு,டெல்அவீவ் மற்றும் மொஸ்கோவுடனான புதிய உறவுப் பாலங்கள், நண்பர்களை அதிகரித்துக் கொள்வதற்கான அங்காராவின் நகர்வுகள் ‘ஒரதிர்வினை’ அமெரிக்கா மற்றும் மொஸ்கோ வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், இரண்டு போட்டி போடும் ஏஜன்டாக்களின் பிரதான செயலிகளுடனும் (Prime Actors) அங்காராவின் புதிய நகர்வு தொடர்புபட்டுள்ளனமையாகும்.

இறுதியாக, அங்காரா, தெஹ்ரான் மற்றும் டெல்அவீவ் போன்ற பிராந்திய அதிகார தலைமையகங்களில் அதிர்ச்சியளிக்கும் அணுகுமுறைகள் , ஆட்டத்தைப் புரட்டிப் போடும் காய்நகர்த்தல்கள் என்பன மத்திய கிழக்கரசியலின் சமகால மற்றும் எதிர்காலப் போக்கினைப் பற்றிய சில அம்சங்களை தெளிவுபடுத்துகிறது.

அதில் பிரதானமாதொரு அம்சம் யாதெனில், பிராந்தியத்திய அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ‘தீர்மானம் எடுக்கும் ஆற்றல்’ (Decision making ability) வல்லரசுகளுக்கு மட்டுமே என்றிருந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல பிராந்திய அரசியல் செயலிகளின் (Regional Political Actors) கைகளுக்கு பரிமாற்றம் பெறுகிறது அல்லது குறைந்த பட்சம் வல்லரசுகளுடன் பேரம் பேசி தனது நலன்களை பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலை பிராந்திய நாடுகள் அடைந்து கொண்டுள்ளமையாகும். சர்வதேச அரசியலைப் பொருத்தவரை இதுவோர் கூர்ந்து கவனிக்கத்தக்க’மாற்றம்’ எனலாம்.