வடக்கில் சோதனைச் சாவடிகளை நிரந்தரமாக்கும் இராணுவத்தினர்

309 0

வவுனியா – ஓமந்தையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவும் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவச் சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாட்டில் கடந்த வருடகாலமாக கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையால், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் மக்களை கண்காணிப்பதற்காக வவுனியாவில் ஓமந்தை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், தற்காலிக இராணுவச் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டன.

நாட்டில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு வழமையான செயல்பாடுகளை முன்னெடுக்க அனைத்து மக்களும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் வவுனியா- ஒமந்தையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓமந்தை வீதிக்கு அருகிலுள்ள கரையில், சீமெந்திலான தளம் அமைக்கப்பட்டு, இரண்டு நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர் என மக்கள் சுட்டிக்காட்டினர்.