தமிழகத்தில் சொன்னதை செய்யக்கூடிய கட்சி அ.தி.மு.க.தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்தார்.
கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலையில் சத்திரப்பட்டிக்கு திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார். அங்கு வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

