கொவிட் தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும்

291 0

தற்போதைய நிலைமையின் கீழ் தனியார் பிரிவினருக்கும் கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மற்றும் வேறு தொழில் நிறுவனங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவாக பதிவாகின்றமையினால் அடுத்த கட்டமாக தொழில் செய்யும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

´இலங்கையில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் தொழிற்சாலைகளிலும் மற்றும் வேறு தொழில் நிறுவனங்களிலும் பதிவாகின்றனர். விசேடமாக ஆடை தொழிற்சாலைகளில் அதிகமாக பதிவாகின்றது. அடுத்த கட்டமாக தொழில் செய்யும் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும். அதனை அரசாங்கத்தினால் தற்போது வழங்க முடியா விட்டால் தனியார் பிரிவினருக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு சுகாதாரத் துறையிலிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதன் அடிப்படையில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ” என்றார்.