யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ். மாநகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கொரோனா நிலவரம் தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 262 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

