கொழும்பில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு!

375 0

கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிஷீல்ட் தடுப்பூசி பெற இணையத்தில் பதிவு செய்ய முடியுமென கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

இந்த வசதியை கொழும்பு மாநகர சபை வலைத்தளத்திலிருந்து (www.colombo.mc.gov.lk) அல்லது e channelling.com அல்லது e-channeling தொலைபேசி பயன்பாடு மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேவையைப் பெற எந்த இடைத்தரகரும் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.