கடும் குளிர்,மழை,காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் அம்பிகை அம்மாவுக்கான ஆதரவுப் போராட்டம்.

701 0

கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் உணவுப்பூர்வமாக நடைபெற்ற அம்பிகை அம்மாவுக்கான ஆதரவு அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்.

லண்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 16 நாட்களாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அம்பிகை அம்மாவுக்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் மற்றும் அன்னை பூபதி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டு , அகவணக்கத்துடன் இப் போராட்டம் தொடர்ந்தது.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த இவ் நிகழ்வில் பல மக்கள் சுழற்சிமுறையில் வருகை தந்து தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். அம்பிகை அம்மாவின் கோரிக்கைகள் வலுப்பெற பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உலகத் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் செயற்பட வேண்டும் என்றும் தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் அனைவரும் உறுதியுடன் தொடர்ந்தும் பயணிப்போம் எனும் ஓர்மத்துடனும் நிகழ்வு நிறைவுபெற்றது.