யாழில் ஈருருளித் திருடன் மாட்டினார்- 21 ஈருருளிகள் பொலிஸாரால் பறிமுதல்!

374 0

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் ஈருருளித் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை சிவன் கோயிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் நடமாடியபோது சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைதான நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஈருருளித் திருட்டுக்கள் தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேகநபரால் திருடப்பட்டதாக 21 ஈருருளிகளை பொலிஸார் பறிமதல் செய்துள்ளதுடன் மேலும் சில ஈருருளிகள் கையகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு, திருடப்பட்ட ஈருருளிகளை சந்தேகநபர் விற்பனை செய்து பணத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில், ஈருருளிகளைப் பறிகொடுத்தவர்கள் உரிய அடையாளங்களுடன் வருமாறு பருத்தித்துறை பொலிஸார் கோரியுள்ளனர்.