சிறைச்சாலைகளில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண் கைதிகள் என்றும் இதனை அடுத்து சிறைச்சாலையில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 5,125 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் 929 பேரும் மஹசீன் சிறையில் 881 பேரும் மஹர சிறையில் 836 பேரும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் 458 மற்றும் நீர்கொழும்பு சிறையில் 371 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
4,702 கைதிகள் மற்றும் 158 சிறைச்சாலை அதிகாரிகள் வைரஸ் பாதிப்புபில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் 250 கைதிகள் மற்றும் இரண்டு அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

