ஜஹ்ரான் ஐஎஸ் தலைவரை பின்பற்றுவதற்கு காரணம் நவ்பர் மௌலவியே

351 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் நவ்பர் மௌலவியுடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் சரத்வீரசேகரதெரிவித்துள்ளார்.

நவ்பர் மௌலவியுடன் தொடர்பினை பேணிய அரசியல்வாதிகள் குறித்து பயங்கரவாத விசாரiணை பிரிவினரும் ஏனை புலனாய்வு அமைப்புகளும் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நவ்பர் மௌவலி என்ற சந்தேகநபர் பல வருடங்கள் கட்டாரில் வசித்துள்ளார், என தெரிவித்துள்ள அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நவ்பர் மௌலவி 2016 முதல் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்தார் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர ஜஹ்ரானை மூளைச்சலவை செய்து ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின் கொள்கையை பின்பற்றச் செய்தவர் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்பி;ன்னர் ஜஹ்ரான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னெடுப்பதற்கு அவரே தூண்டினார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.