குவாட் உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் நடைபெறும் என தகவல்

352 0

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு குவாட் ஆகும்.

குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பருவநிலை மாற்றம், கொரோனா சூழல்  உள்ளிட்டவை குறித்து  ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில், குவாட் நாடுகளின் உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் நடைபெறும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்று ஆலோசிப்பார்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

குவாட் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடிய படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.