அமீரகத்தில் 55,537 பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதார அமைச்சகம் தகவல்

261 0

கொரோனா பரவலை தடுக்க அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலை தடுக்க அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அமீரகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை அமீரகம் முழுவதும் 64 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு 65.35 என்ற அளவில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பு தடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.