மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு- தொடரும் இழுபறி

388 0

திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை

இன்று நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.