ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் – மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு மார்ச் 18 வரை விளக்கமறியல்

330 0

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மதரஸா பாடசாலை ஒன்றின் அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னதாகக் கைது செய்திருந்தது.

பிரிஏ மற்றும் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் ஹிஸ்புல்லாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக மதரஸா பாடசாலை அதிபர் ஷகீலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.