ஐ.நா முன்றலில் நிகழ்ந்த பேரணிக்கு வலுச்சேர்த்த நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

308 0

நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்தும் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் ஜெனீவாப் பேரணிக்கு வலுச்சேர்க்குமுகமாகவும் அவசரக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 01.03.2021 திங்கள் டென்காக் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்குசெய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

3.00 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய கொரோனா சூழ்நிலையிலும் நூற்றிற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இந்தக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். தாயகத்தில் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்கட்சிகளின் அறிக்கையினை ஆதரிக்கக்கோரியும் நெதர்லாந்து அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையை மறுதலிப்பதற்கான காரணத்தை வலியுறுத்தியும் மறுப்பு அறிக்கையும் கையளிக்கப்பட்டு இறுதியில் எமது தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவெய்தியது.