பொகவந்தலாவை-சீனாகலை தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா

197 0

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சீனாகலை தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜெய் கணேஷ் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவருக்கும், அதேதோட்டத்தை சேர்ந்த மேலும் மூன்று பேருக்குமே இவ்வாறு தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் சீனாகலை தோட்டத்தில் 22 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதுடன், பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 140 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்