பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்- இணைப்பு காணொளி

335 0

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில், அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.

உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.