ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கொட்டாஞ்சேனை பகுதியில் கைது

313 0

கொட்டாஞ்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே சந்தேக நபர்கள் 43 கிலோ 190 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான குடு செல்வி எனும் குழுவைச் சேர்ந்த பழனி ரிமோஷன் எனும் குற்றவாளியின் சீடர்களென தெரிய வந்துள்ளது