கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பாக ஆராயும் விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
மேலும் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களை அடுத்தவார முற்பகுதியில் அறிவிக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் இரவு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பதுடன் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் காணப்பட்ட வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் திருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

