காணாமல் போன மன்னார் மீனவர்களில் ஒருவர் மாலைதீவைச் சென்றடைந்தார்

188 0

மன்னாரில் இருந்து கடந்த ஜனவரி 30ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மூவரில் ஒருவர் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தாழ்வுபாட்டிலிருந்து கடந்த ஜனவரி 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த இரு மீனவர்களும் மன்னாரைச் சேர்ந்த ஒரு மீனவருமாக மூவர் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இயந்திரப் பழுதின் காரணமாக அலையில் அள்ளுண்டு போன நிலையில் படகு புரண்டுள்ளது. இதன்போபாது அனைவரும் கடலில் வீழ்ந்ததில் ஒருவர் மட்டும் மாலைதீவுக் கரையை அடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியவர் தமிழ் மொழி பேசியமையால் தமிழ் மொழி பெயர்ப்புக்காக அங்குள்ள ஓர் இந்திய அதிகாரியை மாலைதீவு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

மொழிபெயர்ப்புக்குச் சென்ற அதிகாரியின் கூற்றின் பிரகாரம் படகில் கொட்வின், பாண்டியன், கண்ணன் ஆகிய மூவரும் பயணித்தபோதும் கண்ணன் மட்டுமே தப்பி மாலைதீவுக் கரையை அடைந்துள்ளார் என தற்போது தெரிய வந்துள்ளது. மற்றவர்களின் கதி தெரிய வரவில்லை.