கடலூர் அருகே என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

290 0

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறில் கிருஷ்ணா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடலூரில் வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர்.  பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்பகை காரணமாக கிருஷ்ணா தரப்பால் கொல்லப்பட்ட வீராவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.