அம்மா பேரவை இணை செயலாளராக வா.புகழேந்தி நியமனம்

216 0

அதிமுக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளராக வா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அம்மா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் வா.புகழேந்தி (கழக செய்தி தொடர்பாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

ஊடகங்களில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் இன்று முதல் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.