13 வயது சொந்த மகளை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை!

282 0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை ஒருவர் எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவ தினமான நேற்று (27) மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.