நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் – ஐ.நா.வில் முழுமையான ஆதரவை கனடா வழங்கும்!

219 0

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து டுவிட்டர் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் “மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆகவே இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை கனடா வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.